Vetri Vel More about the Kataragama Devotees Trust

மும்மதமும் ஒன்றிணையும் திருத்தலம்

இந்து, பௌத்த, முஸ்லிம் மக்கள் வழிபடும் திருத்தலம்

கே.ஸ்ரீதரன்

லகில் உள்ள இந்து பக்தர்கள் யாவரும் கதிர்காம கந்தனை மனதால் நீனைத்து வாயால் புகழ்ந்து பாடி மனதுள் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. கதிர்காம தலம் ஊவா மாகாணத்திலுள்ள புத்தள பிரிவிலுள்ள தியகம என்னும் வனாந்திர பிரதேசத்தில். மாணிக்க கங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திசம ஹாராமவிலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

கதிர்காமத்தைச் சுற்றி பல கோயில்கள் உள்ளன. கதிர்காம சந்நிதி தெற்கு நோக்கியும் வள்ளியம்மன் சந்நிதி வடக்கு நோக்கியும் இருக்கின்றது.

தமது மனக்குறைகளையும் கவலைகளையும் தீர்ப்பதற்காக

நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்கு முன் மாணிக்க கங்கையில் நீராடி தூய ஆடையணிந்து அரோகரா எனும் நாமத்துடன் பூசைப் பொருட்களை எந்தி வழிபடும் அடியார்கள் ஏராளம்.

கிதிர்காம ஆலய அமைப்பினை நான்காக வகுக்கலாம்.

உருகுணை மகா கதிர்காம ஆலயம் சுவாமி சந்நிதி, வள்ளியம்மன் கோயில். கண்ணகியம்மன் கோயில் (பத்தினி கோயில்) இம்மூன்று ஆலயமும் பௌத்த மத முறைப்படி பரிபாலிக்கப்படுகின்றன.

இரண்டாவதாக மாணிக்க பிள்ளையார் கோயில் தெய்வானை அம்மன் கோயில் வைரவர் கோயில் முத்துலிங்க சுவாமி கோயில் கதிரைமலை என்பன உள்ளன.

மூன்றாவது கிரிவிஹாரை, பெருமாள் கோயில். நான்காவது முஸ்லிம் மக்களுக்கான பள்ளிவாசல். இதில் முஸ்லிம் மதத்தையொட்டி, குர்ஆன் ஒதுதல் இரவு 10.00 மணிக்கு பாட்டு பஜனை என்பன இடம் பெறுகின்றன.

ஆதிகாலம் தொட்டு பரம்பரை பரம்பரையாக காட்டு வழியாக நடந்து வந்து பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் பல்லாயிரக்கணக்கான திமிழ், சிங்கள, முஸ்லிம் அடியார்கள் தத்தமது வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கதிர்காமத்தில் முருகனுக்கு காவடியெடுத்து வேல் பூட்டி, விபூதி பூசி அடியார்கள் வணங்கு வதைக் காணும்போது பக்திப்பரவசம் உண்டாகின்றது. மனமும் நெகிழ்ந்து போகிறது.


Courtesy: The Veerakesari of Wednesday, 15 August, 2007